மாணவ, மாணவியருக்கு ஆன்மிக முகாம்
ஓசூர்: ஓசூர், பாரதிதாசன் நகரிலுள்ள கல்யாண காமாட்சியம்மன் கோவிலில், சென்னை ஸ்ருதி கேந்த்ரா அமைப்பு சார்பில், 6 முதல், 12 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு, தாச ஆஞ்சநேயா என்ற தலைப்பில், ஒரு நாள் ஆன்மிக முகாம் நேற்று காலை நடந்தது. ஸ்ருதி கேந்த்ராவின் மோக்ச வித்யானந்தா சுவாமிகள் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்து பேசினார். மாணவ, மாணவியர் சுய ஒழுக்கம், பண்பாடு, இலக்கியம், தேசபக்தி, குடும்ப நேசம் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வகையில், 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள், பாடல்கள், கதைகள், ஆஞ்சநேயர் ஓவியங்களில் ராம நாமத்தை எழுதி வர்ணம் தீட்டுவது போன்றவை குறித்து, கற்று கொடுக்கப்பட்டன.அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை செயலாளர் விஷ்ணுகுமார், சேவாபாரதி திருஞானம், சொக்கலிங்கம், வெங்கட்ராமன் உட்பட பலர் பங்கேற்றனர். சிவாத்மிகா என்பவர், மாணவ, மாணவியரை ஒருங்கிணைத்தார்.