உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க.,வை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார்; முனுசாமி பேச்சு

அ.தி.மு.க.,வை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார்; முனுசாமி பேச்சு

ஓசூர், நவ. 9-''முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க.,வை பார்த்து பயப்படுகிறார்,'' என, ஓசூரில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர கிழக்கு பகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், பகுதி செயலர் ராஜி தலைமையில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலர் பாலகிருஷ்ணாரெட்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், துணை பொதுச்செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது:தி.மு.க.,வை அழிக்க பார்க்கிறார்கள் என, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., அரசின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவிப்பதால், தி.மு.க.,வை அழிக்க பார்ப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். முதல்வர் ஸ்டாலின் அ.தி.மு.க.,வை பார்த்து பயப்படுகிறார். ஓசூர் சட்டசபை தொகுதியில், பல ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அதேபோல் மீண்டும் வெற்றி பெற வேண்டும். ஓசூர் மாநகராட்சியில், காலை எழுந்தவுடன் தண்ணீர் வராததால் மக்கள் அவதிப்படுகின்றனர். குப்பை, சாக்கடை சுத்தம் செய்யப்படாததை பார்த்து, தினமும் அரசை மக்கள் திட்டி வருகின்றனர். கட்சிகளை சாராத பொதுமக்கள், நடுநிலையாளர்களிடம் சென்று, தி.மு.க., ஆட்சியின் அவலங்களை கூற வேண்டும்.இவ்வாறு பேசினார்.ஜெ., பேரவை மாவட்ட செயலர் சிட்டி ஜெகதீசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலர் சென்னகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ