உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கி.கிரியில் 228 இடங்களில் நடத்த முடிவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கி.கிரியில் 228 இடங்களில் நடத்த முடிவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று (15ம் தேதி) முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இத்திட்டத்தில், நகர் பகுதிகளில் 55 முகாம்கள், ஊரக பகுதிகளில் 173 முகாம்கள் என மொத்தம் 228 முகாம்கள் நடைபெற உள்ளது.முதற்கட்டமாக இன்று முதல் (15ம் தேதி) வருகிற ஆக.,14 வரை மொத்தம், 78 முகாம்கள் நடக்கிறது. இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2ம் கட்டமாக, 78 முகாம்கள், 3ம் கட்டமாக, 72 முகாம்கள் நடக்கவுள்ளன. இதில், 2,200 தன்னார்வலர்கள், வீடுகள் தேடி சென்று, 5,39,278 குடும்பத்தினரிடம் முகாம் நடக்கும் இடம், விபரங்களை கூறுவர். முகாம் நடக்கும் இடத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, உங்களுக்கு தகவல் தெரிவிப்பர். விண்ணப்பங்களை பெறுவோர், முகாம்களில் கலந்து கொண்டு, மகளிர் உரிமைத்தொகை பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை