உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ஸ்டாலின் பிறந்த நாள் விழா

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின், 73வது பிறந்த நாள் விழா கேக் வெட்டி நேற்று கொண்டாடப்பட்டது. இதில், தி.மு.க.,வை சேர்ந்த இளையராஜா, சரவணன், கவுதம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், மத்துார் பஸ் ஸ்டாண்டில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தரசு தலைமையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி, சிக்கன் பிரியாணி வழங்கி கொண்டாடினர். இதில், மத்துார் ஒன்றியத்தை சேர்ந்த, தி.மு.க.,வினர், 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை