உங்களுடன் ஸ்டாலின் முகாம்
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பாரூர், செல்லகுட்டப்பட்டி உள்ளிட்ட பஞ்.,களுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று, பாரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.இதில், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., சரவணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, திருமால், ஞானசேகரன், கவுதம் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அதேபோல் மத்துார் ஒன்றியம், வாலிப்பட்டி, எட்டிப்பட்டி பஞ்.,களுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. இதில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், ஆகிய துறைகளுக்கு அதிகளவு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் மத்துார் பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, செல்லக்கண்ணாள், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தரசு மற்றும் 500க்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.