மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
22-Aug-2025
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம் பனந்தோப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். செட்ரப்பட்டி, அக்ரஹாரம் பஞ்சாயத்து பெண்கள் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பம் அளித்தனர். அதே போல், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்டவை கோரி, பொதுமக்கள் விண்ணப்பம் அளித்தனர். அரூர் தெற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் தென்னரசு மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
22-Aug-2025