உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மத்துார் பஞ்.,ல், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று மத்துார்பதி சமுதாயக் கூடத்தில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இதில் போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, மத்துார் பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, செல்லக்கண்ணாள், ஒன்றிய செயலாளர் வசந்தரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* ஊத்தங்கரை அடுத்த, கீழ்குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், நொச்சிப்பட்டி, கீழ்குப்பம் ஆகிய பஞ்., சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நேற்று நடந்தது. ஊத்தங்கரை பி.டி.ஓ., பாலாஜி, தாசில்தார் மோகன்தாஸ், தனி தாசில்தார் குமரவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ