உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிணற்றில் விழுந்த மாணவி உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த மாணவி உயிரிழப்பு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, ஜெய்னுாரை சேர்ந்தவர் பாண்டியன், 42, கூலித்-தொழிலாளி, இவரின் மகள் சோபனா, 13. மாரி-செட்டிஹள்ளி கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்-பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், சோபனா சைக்கிளில் மாரி-செட்டிஹள்ளியில் உள்ள தன் பள்ளி தோழி வீட்-டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்-டிற்கு திரும்பவில்லை. அவரின் பெற்றோர் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு மேல், பல இடங்களில் தேடிய நிலையில், மாரிசெட்டி-ஹள்ளி சுப்பிரமணி என்பவரின் விவசாய கிணற்றில், சோபனா சடலமாக மிதப்பது தெரிந்து மீட்டனர். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி