அடிப்படை வசதி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி, மாணவர்கள் கல்லுாரி முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வேலை நேரத்தை காலை, 10:00 முதல், 4:20 மணி வரை என்பதை காலை, 10:00 முதல் மதியம், 2:30 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும். 23 துறைகளிலும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் மாணவியருக்கான கழிவறையை தினமும் துாய்மை செய்து, நாப்கின் அகற்றும் இயந்திரம் வைக்க வேண்டும்.சிதிலமடைந்துள்ள வகுப்பறை கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும். வகுப்பறையில் மின்வி-ளக்கு, மின் விசிறிகளை சரி செய்ய வேண்டும். வகுப்பறையில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த வளாகம் முழு-வதும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.