சாலை விரிவாக்கத்தால் அகற்றப்பட்ட நிழற்கூடம் உயிரை பணயம் வைக்கும் மாணவ, மாணவியர்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சமத்துவபுரம் பகுதியில், நல்லுார் போக்குவரத்து சோதனைச்சாவடி எதிரே, பயணிகள் நிழற்கூடம் இருந்தது. பாகலுார் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றினர். இதனால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். நல்லுார் சோதனைச்சாவ-டிக்கு செல்லும் டிரைவர்கள், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் பஸ்சிற்கு சாலையில் மாணவ, மாணவியர் காத்திருக்க வேண்டியுள்ளது. அந்நேரத்தில் அவ்வழியாக அதிவேகமாக வரும் வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உயிரை பணயம் வைத்து தான், மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர்கள் தினமும் பஸ் ஏற வேண்டியுள்ளது. மேலும், மழை, வெயிலில் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல், சாலையி-லேயே காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க, மக்கள் வலியுறுத்திய போதும், நெடுஞ்சாலைத்துறை உட்பட யாரும் கண்டுகொள்ள-வில்லை. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், பய-ணிகள் நிழற்கூடம் அமைத்து கொடுக்க, மாவட்ட நிர்வாகம் முன்-வர வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.