தென்பெண்ணை ஆற்றில் 5வது நாளாக வெள்ளப்பெருக்கு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 1,258 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 1,718 கன அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,670 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதனால் நேற்று, 5வது நாளாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் அதிகளவில் கலந்திருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் நேற்றும், ரசாயன நுரை சேர்ந்து, தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசியது.