மேலும் செய்திகள்
15ல் பாகலுார் சாலை பணிகள்மாற்று பாதையில் வாகனங்க
10-Apr-2025
ஓசூர்:காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை, தீவிரவாதிகள் சுட்டு கொன்று விட்டு தலைமறைவான நிலையில், ஓசூர் அடுத்த தமிழக எல்லையில் வடமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை, போலீசார் தீவிர சோதனை நடத்தி அனுப்பி வருகின்றனர்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலை, ஓசூர் வழியாக செல்கிறது. வட மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும், கர்நாடக வழியாக தமிழக எல்லையான ஜூஜூவாடியில் நுழைந்து தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு செல்கின்றன.தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த ஜூஜூவாடி பகுதியில், போலீசார் சோதனைச்சாவடி அமைத்து, கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 நாட்களாக, வட மாநில பதி வெண் கொண்ட கார், லாரிகளை, தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, தீவிர சோதனை செய்த பின்னரே செல்ல, போலீசார் அனுமதிக்கின்றனர்.
10-Apr-2025