உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தாளாப்பள்ளி ஏரி புதுப்பிக்கும் பணி

தாளாப்பள்ளி ஏரி புதுப்பிக்கும் பணி

கிருஷ்ணகிரி, தாளாப்பள்ளி ஏரியில் துார்வாரி புதுப்பிக்கும் பணியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளப்பள்ளி பஞ்.,ல் உள்ள தாளாப்பள்ளி ஏரியை துார்வாரி புதுப்பிக்கும் பணியை, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து துவக்கும் பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து பேசியதாவது:தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும், ஏரிகளை துார்வார பல்வேறு முனைப்புகளை காட்டி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், அதிகளவு நீர்நிலைகள் கொண்ட மாவட்டம். சி.எஸ்.ஆர்., செயல்பாடுகள் மூலம், தனியார் நிறுவனங்களும் பங்கேற்று, மேலும் சிறப்பாக செயல்பட முடிகிறது. தாளப்பள்ளி ஏரி மூலம், 5,200 ஏக்கர் பயனடையும் வகையில், நீர்வரத்து கால்வாய்கள் துார்வாரப்படும். இந்த புதுப்பிப்பு பணிகள் மூலம், நீர் காப்பாற்றும் திறனை அதிகரிக்க, மணல் அகற்றுதல், அழுகிய நிலையை தடுக்கும் வகையில், புனை உருவாக்குதல் மற்றும் வலுப்படுத்தல், அதிக நீர் வெளியேற்றும் வசதிகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுமக்களும் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, டைட்டன் நிறுவனம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் மனோகர், இந்திய தொழில் கூட்டமைப்பு இயக்குனர் ஹேமா ஜேம்ஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ