உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சங்கங்களுக்கு பால் உற்பத்தி மானியம்நேரடியாக வழங்கும் உத்தரவுக்கு நன்றி

சங்கங்களுக்கு பால் உற்பத்தி மானியம்நேரடியாக வழங்கும் உத்தரவுக்கு நன்றி

கிருஷ்ணகிரி:தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆவின் கூட்டுறவு இணையம், பால் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக லிட்டருக்கு, 3 ரூபாய் வீதம் வழங்க உத்தரவிட்டது. இது பால் உற்பத்தியாளர்களை வெகுவாக பாதித்தது. காரணம், ஒவ்வொருவருக்கும் தனித்தனி வங்கி சேமிப்பு கணக்கு இல்லாததும், நேரடியாக பால் பணத்துடன் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் தனியாருக்கு சென்று விடுவோம் என கோரிக்கை வைத்ததன் படி, கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பிறகு கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கலெக்டர், தமிழ்நாடு அரசு கால்நடைத்துறை மற்றும் பால்வள செயலாளரிடம் பேசியதன்படி, பால் உற்பத்தி குறையாமல் இருக்கவும், பால் உற்பத்தி பெருக்கவும், தனி அலுவலர் மூலமாக மேற்கண்ட ஒப்புகை கடிதம், துணைப்பதிவாளர் பால்வளம் மற்றும் ஆவின் பொதுமேலாளருக்கு கடிதம் கொடுத்து, உற்பத்தி மானியத்தை சங்கங்களுக்கே வழங்க, கால்நடைத்துறை மற்றும் பால்வள செயலாளர், கலெக்டருக்கு வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளார். இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க தனி அலுவலர், கலெக்டர் மற்றும் ஆவின் பொது மேலாளருக்கும், தமிழக பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ