உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள கல்-யாண காமாட்சி அம்மன் கோவிலில், 26ம் ஆண்டு லட்சார்ச்-சனை விழா மற்றும் 18ம் ஆண்டு காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி இரு நாட்கள் நடந்தன.நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, காலை, 6:45 மணிக்கு, கல்யாண காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபி-ஷேகம், 8:00 மணிக்கு லட்சார்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்-தன. காலை, 11:30 மணிக்கு, மஞ்சள், எலுமிச்சை, தேங்காய், உப்பு போன்ற பூஜை பொருட்கள் ஏலம் விடப்பட்டன. மாலை, 4:30 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பெற்றது.நேற்று காலை, 8:30 மணிக்கு, காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக சென்-றனர். 10:00 மணிக்கு காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்-யாண வைபவம் மற்றும் காசி யாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் சேவை, பாத பூஜை மற்றும் 11:30 மணிக்கு திருமாங்-கல்ய பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்க-ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ