உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நடைபாதை தகராறில் மூவர் மீது வழக்கு

நடைபாதை தகராறில் மூவர் மீது வழக்கு

பர்கூர்:பர்கூர் அடுத்த மேட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் மாதவன், 53, விவசாயி. இவரது சகோதரர் தர்மன், 50. இவர்களுக்கு சொந்தமான நிலம், கீழ்குப்பத்தில் உள்ளது. இதில், நடைபாதை தகராறு இருந்துள்ளது. கடந்த, 24ல், ஏற்பட்ட தகராறில், மாதவனை, தர்மன் அவரது மனைவி வசந்தா, 48, மகன் மாரிமுத்து, 24, ஆகியோர் சேர்ந்து தாக்கி உள்ளனர். மாதவன் புகார் படி பர்கூர் போலீசார், அவரை தாக்கிய மூவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !