உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் பள்ளி ஆசிரியரை தாக்கிய மூவர் கைது

தனியார் பள்ளி ஆசிரியரை தாக்கிய மூவர் கைது

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காரப்பள்ளி அருகே செந்தில் நகரை சேர்ந்தவர் நவீன்குமார், 32. பத்தலப்பள்ளி அருகே கசவுகட்டாவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த, 18ம் தேதி மாலை, 6:45 மணிக்கு, ஓசூர் இ.எஸ்.ஐ., இன்னர் ரிங்ரோட்டில் உள்ள கர்நாடக மாநில மதுக்கடை அருகே வைத்து, நவீன்குமாருக்கும், ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த லோகேஷ், 38, என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லோகேஷ்,ஆசிரியர் நவீன்குமாரை தாக்கி, தகாத வார்த்தையால் திட்டினார்.அன்றிரவு, 8:30 மணிக்கு, அரசனட்டி மைதானத்திற்கு சென்ற நவீன்குமார், மொபைல்போனில் லோகேஷை அழைத்தார். அதனால் அங்கு, தன் நண்பர்களுடன் சென்ற லோகேஷ், ஆசிரியர் நவீன்குமாருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டதுடன், நண்பர்களுடன் சேர்ந்து, இரும்பு ராடு, இரும்பு பைப் ஆகியவற்றால், அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த நவீன்குமார், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.அவரது புகார்படி, லோகேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சுரேஷ், 36, வேணுகோபால சாமி தெருவை சேர்ந்த வேணு, 37, ஆகிய, 3 பேரை, சிப்காட் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ