உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலவரப்பள்ளி அணையில் ரூ.3.43 கோடியில் பூங்கா விரைந்து முடிக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

கெலவரப்பள்ளி அணையில் ரூ.3.43 கோடியில் பூங்கா விரைந்து முடிக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

கெலவரப்பள்ளி அணையில் ரூ.3.43 கோடியில் பூங்காவிரைந்து முடிக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்புஓசூர், அக். 17-ஓசூர் கெலவரப்பள்ளி அணையில், 3.43 கோடி ரூபாயில் நடந்து வரும் பூங்கா பணிகளை விரைந்து முடிக்க, சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் சிறுவர் பூங்கா இருந்தது. அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதை பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக, பராமரிப்பின்றி புதர் மண்டியது. விளையாட்டு உபகரணங்கள் வீணானது. சுற்றுலா பயணிகளிடம், நீர்வளத்துறை மூலம் நபர் ஒருவருக்கு, 5 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், பொழுதை கழிக்க வசதிகள் ஏதும் இல்லை. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையின் வலதுபுறத்தில், 6.50 ஏக்கர் பரப்பளவில், 3.43 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.முதற்கட்டமாக பூங்கா இடத்தை சுற்றி, இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 6 மாதமாக மற்ற பணிகள் நடக்கின்றன.மந்தகதியில் நடக்கும் பணிகளை விரைந்து முடித்து, பூங்காவை பயன்பாட்டிற்கு வர, சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை