உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வனத்துறையினருக்கு மிரட்டல் டிராக்டர் டிரைவர் கைது

வனத்துறையினருக்கு மிரட்டல் டிராக்டர் டிரைவர் கைது

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம், அய்யூர் பிரிவு வனகாப்பாளராக இருப்பவர் சுரேஷ், 42. கடந்த, 8ம் தேதி நொகனுார் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த யானைகளை கண்காணிக்க, அய்யூர் பிரிவு வனவர் அங்குரதன் தலைமையில், சுரேஷ் மற்றும் வன காவலர் மாரிமுத்து ஆகியோர் பைக்கில் ரோந்து சென்றனர். அந்தேவனப்பள்ளி - காரண்டப்பள்ளி சாலையில், சாய்பாபா கோவில் அருகே வந்த போது, வனப்பகுதியில் இருந்து வந்த பதிவு எண் இல்லாத மகேந்திரா டிராக்டரை சோதனை செய்ய நிறுத்தினர்.டிராக்டரை ஓட்டி வந்த முழுவனப்பள்ளியை சேர்ந்த டிரைவர் ஜானகிராம், 25, அரசு ஊழியர்கள் என்றும் தெரிந்தும், பணி செய்ய விடாமல் தடுத்து, டிராக்டரில் இருந்த கட்டையை எடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக, வன காப்பாளர் சுரேஷ் புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, ஜானகிராமை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ