உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரான்ஸ்பார்மர் ஆயில் காப்பர் காயில் திருட்டு

டிரான்ஸ்பார்மர் ஆயில் காப்பர் காயில் திருட்டு

தளி, தளி அடுத்த ஜவளகிரி அருகே கொல்லப்பள்ளி பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் நேற்று முன்தினம் இரவு மின்தடை செய்த மர்ம கும்பல், மின்கம்பத்தில் இருந்து டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளி விட்டது. பின்னர் அதை உடைத்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில்கள், 30,000 ரூபாய் மதிப்புள்ள, 300 லிட்டர் ஆயிலை மர்ம கும்பல் திருடி சென்றது.இதனால், கொல்லப்பள்ளி சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன்தினம் முதல், நேற்று மதியம் வரை மின் வினியோகம் இல்லை. அதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஜவளகிரி பகுதி மின்வாரிய உதவி பொறியாளர் பெனிட்டா ஆன்டனி மேரி புகார் படி, தளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ