உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., நிர்வாகி வீட்டில் புகுந்த இருவர் கைது

பா.ஜ., நிர்வாகி வீட்டில் புகுந்த இருவர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ், 51. பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர்; கடந்த, 21 அதிகாலை, 2:45 மணிக்கு, இவரது வீட்டின் இரும்பு கேட்டை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், தரைதளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த வீட்டின் கதவுகளை தட்டி கூச்சலிட்டனர். இது தொடர்பாக, ஓசூர் டவுன் போலீசில் நாகராஜ் புகார் செய்தார்.விசாரணையில், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த லாலாப்பேட்டை அருகே குரும்பட்டியை சேர்ந்த வைஷ்வா, 20, பெங்களூரு ஓங்கசந்திராவை சேர்ந்த மஞ்சுநாத், 21, ஆகிய இருவர், நாகராஜ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது தெரிந்தது. அதனால் அவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர். இதில், வைஷ்வா, தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ