உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாலிபரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது

வாலிபரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது

வாலிபரிடம் வழிப்பறி செய்த இருவர் கைதுஓசூர், :தர்மபுரி மாவட்டம், செல்லியம்பட்டி அருகே மணிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகண்ணன், 23. ஓசூர் அருகே பூனப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; கடந்த, 5 இரவு, 8:00 மணிக்கு, தன் கே.டி.எம்., பைக்கில், கர்னுார் பகுதியில் சென்றார். அவரது பைக்கை வழிமறித்த இருவர், கத்தி முனையில் கோகுலகண்ணனை மிரட்டி, அவரது மொபைல் செயலி மூலம், 200 ரூபாயை பறித்தனர். கோகுலகண்ணன் புகார் படி, அவரிடம் பணம் பறித்த, கலுகொண்டப்பள்ளியை சேர்ந்த கொத்தனார் கணேஷ், 30, டிரைவர் சிவா, 21, ஆகிய, 2 பேரை நேற்று முன்தினம் மத்திகிரி போலீசார் கைது செய்து, 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ