இரண்டு பெண்கள் மாயம்
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், மலையனுாரை சேர்ந்தவர் பிரவீனா, 25. இவருக்கு, கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் ஊத்தங்கரை அடுத்த மேட்டு சூலக்கரையை சேர்ந்த வசந்த் பெரியசாமி என்பவருடன் திருமணமானது. சில ஆண்டுகளில் அவரது சகோதரியையும், வசந்த் பெரியசாமி திருமணம் செய்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்ற பிரவீனா மாயமானார். அவரது தந்தை புகார் படி கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர். போச்சம்பள்ளி அடுத்த மோட்டுபட்டியை சேர்ந்தவர் வாசுகி, 42. கடந்த, 21ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் பாரூர் போலீசில் புகார் அளித்தார். அதில், அதேபகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 35, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.