உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யுகாதி பண்டிகை கோலாகலம்

யுகாதி பண்டிகை கோலாகலம்

ஓசூர்: ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலு-காவில், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில், தெலுங்கு மக்களின் வருட பிறப்பான யுகாதி பண்டிகை நேற்று வீடுகளில் கோலாகல-மாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் எழுந்து, தலைக்கு நல்லெண்ணை தேய்த்து குளித்து, வீட்டை மாவிலை தோரணங்-களால் அலங்கரித்து அழகுப்படுத்தினர். பின்னர் முன்னோர் சமா-திக்கு சென்று, உகாதி ஸ்பெஷல் இனிப்பான ஒப்பட்டு மற்றும் புத்தாடைகள் வைத்து, படையல் போட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.தங்களது வீடுகளில் நடந்த யுகாதி விருந்தில், வாழ்க்கை இன்பம், துன்பம் நிறைந்தது என்பதை உணர்த்தும் வகையில், முக்கிய உணவான, மாங்காய், வெல்லம், மிளகாய், புளி, வேப்பம்பூ, உப்பு கலந்த பச்சடி தயார் செய்து உறவினர்களுக்கு பரிமாறினர். அத்துடன் ஒப்பட்டும் வீடு, வீடாக சென்று வழங்கினர். யுகாதி பண்டிகையான நேற்று, ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உட-னுறை சந்திரசூடேஸ்வரர் கோவில், கோபசந்திரம் தட்சிண திருப்-பதி கோவில், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ