100 சதம் மானியத்தில் காய்கறி, பழம், பயறு விதை தொகுப்பு
கிருஷ்ணகிரி,ஊட்டச்சத்து மேலாண்மை திட்டத்தில், காய்கறி, பழ வகைகள், பயறு வகை விதை தொகுப்புகளை, 100 சதவீத மானியத்தில் பெறலாம்.இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட, ஊட்டச்சத்து மேலாண்மை இயக்க திட்டத்தை நாளை (ஜூலை 4) தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார். இத்திட்டம் நம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும், நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், காய்கறிகள் விதை தொகுப்பு, பழச்செடிகள் தொகுப்பு மற்றும் பயறு வகைகள் விதை தொகுப்பு வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில், காய்கறி விதை தொகுப்பில், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரைவகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி வகைகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். பழச்செடி தொகுப்பில் பப்பாளி, கொய்யா, எழுமிச்சை ஆகிய மூன்று வகையும், பயறு விதை தொகுப்பில் மரத் துவரை, அவரை, காராமணி உள்ளிட்டவைகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்டும். இந்த திட்டத்தை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார பயனாளிகளும் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, அந்தந்த வட்டார தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.