ரூ.2.62 லட்சம் குட்கா கடத்திய வாகனம் பறிமுதல்
ரூ.2.62 லட்சம் குட்கா கடத்திய வாகனம் பறிமுதல் ஓசூர், சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா மற்றும் போலீசார், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுண்டகிரி மேம்பாலம் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த பொலிரோ பிக்கப் வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது, 2.62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 415 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 96 கர்நாடகா மதுபான பாக் கெட் இருந்தன. டிரைவர் தப்பியோடிய நிலையில், புகையிலை பொருட்கள், மதுபானம் மற்றும் இரு மொபைல்போன்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவர் மற்றும் வாகன உரிமையாளரை தேடி வருகின்றனர்.