உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்

வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்

ஓசூர்: ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள செம்பகவல்லி சமேத பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த, 16ல் துவங்கியது.நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு, மாலை, 6:00 மணிக்கு, ஷேச வாகனம், கஜவாகன உற்சவம் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு கருடோற்சவம் நடந்தது. 11:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரித்த தேரில், அமர வைக்கப்பட்டு, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்-தனர்.முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 8:00 மணிக்கு சயனோற்சவம் நடந்தது. விழா இன்று நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை