விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து, விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கோட்ட மாத்ருசக்தி அமைப்பாளர் உஷா வரவேற்றார். மாவட்ட தலைவர் திலீப்குமார், செயலாளர் மஞ்சு, பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் கிரண், மாத்ருசக்தி மாநில அமைப்பாளர் ஜெயந்தி சுரேஷ், செயலாளர் விஷ்ணுகுமார் ஆகியோர் பேசினர். மாவட்ட இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஹிந்து மதத்தின் ஆணி வேரான சைவ, வைணவ சமயங்களை வைத்து பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டிப்பதோடு, கட்சிப் பதவியில் இருந்து நீக்கிய அவரை, அமைச்சர் பதவியில் இருந்தும் உடனே நீக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.