ஓசூரில் கழுதையை கொன்று தலை திருட்டு நரபலிக்காக நடந்ததா? போலீஸ் விசாரணை
ஓசூர்: ஓசூர் அருகே, கழுதையை வெட்டி கொன்ற மர்ம நபர்கள், தலையை எடுத்துச் சென்றனர். நரபலி கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்-ளியை சேர்ந்தவர் ஆனந்த், 43, சலவை தொழிலாளி. அப்பகுதி ஏரிக்கரையோரம் கொட்டகை அமைத்து, 20 கழுதை வளர்த்து வருகிறார். மக்கள் கேட்கும் போது, கழுதை பால் கொடுத்து வந்-துள்ளார். சிலர் கழுதை முடி மற்றும் கோமியத்தை கேட்கும்-போது மறுத்து வந்துள்ளார். இதனால் அவர்கள், அவர் மீது ஆத்தி-ரத்தில் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை கொட்டகைக்கு ஆனந்த் சென்றார். அப்போது கொட்டகையின் கேட் சேதப்படுத்தப்பட்டிருந்தது. உள்ளே கழு-தைகள் ரத்த கறையுடன் சத்தம் போட்டபடி இருந்தன. 10 வய-தான ஒரு பெண் கழுதை, வெட்டப்பட்டு கிடந்தது. தலையை காணவில்லை. கொல்லப்பட்ட கழுதையின் நான்கு கால்களின் நரம்புகளும் அறுக்கப்பட்டிருந்தன.இதுகுறித்து மத்திகிரி போலீசில், ஆனந்த் புகாரளித்தார். நேற்று முன்தினம் அமாவாசை என்பதால், நரபலி கொடுக்க கழுதையை கொன்று, தலையை வெட்டி எடுத்து சென்று, பூஜை செய்திருக்-கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கொல்லப்பட்ட பெண் கழுதை சினையாக இருந்ததாக, ஆனந்த் புகாரில் தெரிவித்-துள்ளார்.