மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
03-Sep-2025
ஓசூர் :ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 1,003 கன அடி நீர்வரத்து இருந்தது. அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், நேற்று காலை நீர்வரத்து, 1,290 கன அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 1,202 கன அடி, வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் குறைந்த அளவில் ரசாயன நுரையுடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை சுத்தம் செய்யவோ, ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என, வருவாய்த்துறையினர், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். நேற்று காலை நிலவரப்படி அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.
03-Sep-2025