கே.ஆர்.பி.,அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம், 825 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 1,061 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான, 52 அடியில், நீர்மட்டம், 49.45 அடியாக உள்ளது. அணையில் இருந்து ஆற்றிலும், பாசன கால்வாய்கள் வழியாகவும், 593 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.