உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அனுமதி பெறாமல் வைப்பது அதிகரிப்பு

துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அனுமதி பெறாமல் வைப்பது அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அசைவ விருந்து நடந்தது. காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., 70க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, டவுன் பஞ்., கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை