உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் பரவலாக மழை

கிருஷ்ணகிரியில் பரவலாக மழை

கிருஷ்ணகிரியில் பரவலாக மழைகிருஷ்ணகிரி, அக். 4-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு ஓசூர், கெலவரப்பள்ளி அணை, தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், சாரல் மழை பெய்தது.நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக கெலவரப்பள்ளி அணையில், 85 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், ஓசூர், 43.80, தளி, சின்னாறு அணையில் தலா, 20, சூளகிரி, 19, ஊத்தங்கரை, 14.20, பாம்பாறு அணை, 5, தேன்கனிக்கோட்டை, 4, அஞ்செட்டி, 2.40, என மொத்தம், 213.40 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் நேற்றும் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகமாக இருந்தது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 733 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 563 கன அடியாக சரிந்தது.அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில், 178 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 48 அடியாக நீர்மட்டம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி