உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தற்காலிக சத்துணவு சமையலரைகத்தியால் வெட்டிய பெண் கைது

தற்காலிக சத்துணவு சமையலரைகத்தியால் வெட்டிய பெண் கைது

கெலமங்கலம்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த கோவிந்தப்பள்ளியை சேர்ந்தவர் சரவணன் மனைவி அம்பிகா, 29. அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்தில், தற்காலிக சத்துணவு சமையலராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி, 32. இவர், தன் கணவர் சக்திவேலுவுக்கும், அம்பிகாவிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்தார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அஸ்வினி, கோவிந்தப்பள்ளி பகுதியில் வைத்து, நேற்று அம்பிகாவை கத்தியால் இடது பக்க காது மற்றும் தாடையில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அம்பிகா, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார் படி, கெலமங்கலம் போலீசார், அஸ்வினி யை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ