லாரி மோதி பெண் பலி
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலுார் வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் சேகர், 47. இவரது மனைவி மாதம்மாள், 45. தம்பதி இருவரும் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, வீட்டின் அருகே தங்களது, ரெனால்ட் க்விட் கார் அருகே நின்றிருந்தனர். அப்போது, ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள பாரதியார் நகரை சேர்ந்த மது, 37, என்பவர், லாரியை பின்நோக்கி எடுத்து வந்து, அங்கு நின்றிருந்த மாதம்மாள், சேகர் மற்றும் காரின் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த மாதம்மாள், சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் சேகர், காயத்துடன் உயிர் தப்பினார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.