உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கஞ்சா பதுக்கிய தொழிலாளி கைது

கஞ்சா பதுக்கிய தொழிலாளி கைது

ஓசூர்; ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுமன், 42. கிருஷ்-ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கலுகொண்டப்-பள்ளியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். தன் சொந்த ஊரிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்த சுமன், கலுகொண்டப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, மத்திகிரி போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.அங்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சுமன் தன் வீட்டின் அருகே, 3.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6.5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரிந்து, அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !