உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் மோதி தொழிலாளி சாவு

பைக் மோதி தொழிலாளி சாவு

மதிகோன்பாளையம் :தர்மபுரி அடுத்த, செம்மாண்டகுப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணம்மாள், 63, இவர் நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு திருப்பத்துார்- தர்மபுரி சாலையில் செமாண்டகுப்பம் அருகே, நடந்து சென்றார். அப்போது, திருப்பத்துார்- தர்மபுரி சாலையில் தர்மபுரி நோக்கி ராயல் என்பீல்டு பைக்கில் வந்தவர் கிருஷ்ணம்மாள் மீது மோதினார். இதில், தலையின் பின் பக்கத்தில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே கிருஷ்ணம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை