நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
ஓசூர்: கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், உனுகனஹள்ளி கிரா-மத்தை சேர்ந்தவர் ஆனந்த், 31. இவரும், பெங்களூரு கிரீன் நகரை சேர்ந்த கவுதம், 42, மாண்டியாவை சேர்ந்த ஆனந்த், 32, பெங்களூரு ஸ்ரீநகரை சேர்ந்த சதீஷ், 40, பங்காருபேட்டையை சேர்ந்த யஸ்வந்த், 16, பிரதீப், 18, சரத், 22, ஆகியோர், சென்-னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பானிப்பூரி தயார் செய்து வழங்க சமையல் வேலைக்காக, டாடா இன்ட்ரா வாகனத்தில் நேற்று முன்தினம் சென்றனர்.மைசூரு அருகே, கொள்ளேகால் பகுதியை சேர்ந்த யசோதரன், 27, என்பவர் வாகனத்தை ஓட்டினார். பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு சென்றபோது, அப்பகு-தியில் எந்த சிக்னலும் செய்யாமல், கன்டெய்னர் லாரியை அதன் டிரைவர் நிறுத்தியிருந்தார். அதனால், அதன் பின்னால் டாடா இன்ட்ரா வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த ஆனந்த், ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். கவுதம், ஆனந்த், சதீஷ், யஸ்வந்த், பிரதீப், சரத் மற்றும் டிரைவர் யசோ-தரன் ஆகிய, 7 பேர் காயமடைந்தனர். ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.