உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வளர்ப்பு நாயால் பிரச்னை தொழிலாளி குத்திக்கொலை

வளர்ப்பு நாயால் பிரச்னை தொழிலாளி குத்திக்கொலை

கெலமங்கலம்:கெலமங்கலம் அருகே நாய் கடிக்க முயன்ற தகராறில், தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே நார்பனட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால், 45; கூலித்தொழிலாளி. கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே கொத்தனுார் தின்னை பகுதியை சேர்ந்தவர் முனியேந்திரா, 21. இவர், நார்பனட்டி கிராமத்திலுள்ள தன் தாய்வழி பாட்டியான கவுரம்மா, 60, வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, கோபால் வளர்த்து வரும் நாய், முனியேந்திராவை கடிக்க முயன்றது. இதனால் கோபாலுக்கும், முனியேந்திராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முனியேந்திரா வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்த கோபாலை, முனியேந்திரா ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்தினார். படுகாயமடைந்த கோபாலை, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். கெலமங்கலம் போலீசார், முனியேந்திராவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி