உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கர்நாடகா எல்லையில் கிடந்த சூட்கேசில் இளம்பெண் சடலம்

கர்நாடகா எல்லையில் கிடந்த சூட்கேசில் இளம்பெண் சடலம்

ஓசூர், கர்நாடகா மாநில எல்லையான சந்தாபுரம் பகுதியில், ரயில்வே மேம்பாலம் அருகே நீல நிற சூட்கேஸ் ஒன்ற நேற்று மதியம் கிடந்தது. இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், சூர்யா சிட்டி போலீசார் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தபோது, 15 முதல், 19 வயதிற்கு உட்பட்ட இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேசிற்குள் கை, கால்களை மடக்கி பூட்டி வைத்திருந்தது தெரிந்தது. கொலையான பெண் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.அப்பெண் சிவப்பு நிற மேலாடை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார். பெண்ணின் மூக்கு மற்றும் காது பகுதியில் ரத்தம் கசிந்துள்ளது. உடலில் வேறு எங்கும் காயங்கள் இல்லை. சூர்யா சிட்டி போலீசார் மற்றும் ரயில்வே போலீசார், தங்கள் எல்லைக்குள் இல்லை என கூறியதால், வழக்குப்பதிவு செய்ய காலதாமதமானது. கொலையான பெண் சடலம், ஆக்ஸ்போர்டு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.பெண்ணை வேறு பகுதியில் கொலை செய்து, சடலத்தை ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே வீசி சென்றிருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சூர்யா சிட்டி போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி