உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யோகா பயிற்சி முகாம்

யோகா பயிற்சி முகாம்

முள்ளிப்பள்ளம் : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி கல்வி இயக்குனரின் உத்தவுப்படி, மாணவர்களுக்கு அறிவுத்திறன், ஞாபகசக்தி, பண்பு பயிற்சி ஏற்பட, வேதாந்திரி மகரிஷி மனவளக்கலை இயக்கத்தின் சார்பில் நடந்த முகாமிற்கு தலைமை ஆசிரியர் ஜே.ஜமுனா தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் பாலசுப்பிரமணியம் துவக்கினார். பயிற்சி பயிற்றுனர்கள் ரங்கநாயகி, நாகஜோதி, சுமதி, சுப்பிரமணியம் ஆகியோர் ஐநூறு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். தினமும் 45 நிமிடம் யோகா பயிற்சி வகுப்பு பள்ளியில் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ