உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீட், ஜெ.இ.இ., பயிற்சிக்கு டால்பின் பள்ளி ஒப்பந்தம்

நீட், ஜெ.இ.இ., பயிற்சிக்கு டால்பின் பள்ளி ஒப்பந்தம்

மதுரை: மதுரை பொன்மேனி பைபாஸ் ரோடு டால்பின் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜெ.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை விநாயக் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தாளாளர் கண்மணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர அதிக வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.இன்ஸ்டிடியூட் நிறுவனர் நாராயணபிரபு கூறுகையில் இத்தேர்வுக்கு இப்பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைத்து தேர்ச்சி பெற செய்வோம். தற்போது பயிற்சிக்கான சேர்க்கை நடக்கிறது.96263 49777ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ