உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உறுப்புகள் தானம்; அரசு மரியாதை

உறுப்புகள் தானம்; அரசு மரியாதை

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் 37. மானாமதுரை தனியார் தொழில்நுட்பக் கல்லுாரி அலுவலர். பணி முடிந்து வீட்டிற்கு டூவீலரில் சென்ற போது விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்தார். உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. நேற்று மாலை அவரது உடலுக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் பிரியா, தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சித் தலைவர் பாலமுருகமகாராஜா மற்றும் வருவாய்த்துறையினர் மரியாதை செலுத்தினர். செல்வேந்திரனுக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ