உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் நேற்றும் 2 விமானங்கள் ரத்து

மதுரையில் நேற்றும் 2 விமானங்கள் ரத்து

திருப்பரங்குன்றம்: மைக்ரோ சாப்ட் இணையதள பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் மதுரையில் இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சில விமானங்கள் தாமதமாக வந்தன. நேற்றும் அப்பிரச்னை தொடர்ந்தது. நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை வரவேண்டிய விமானமும், பெங்களூருவில் இருந்து மதுரை வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. மும்பையிலிருந்து மதியம் 3:00 மணிக்கு மதுரை வரவேண்டிய விமானம் மாலை 4:30 மணிக்கு வந்தது. மற்ற விமானங்கள் காலதாமதமின்றி வந்து சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ