2 லட்சம் உறுப்பினர்கள்: பா.ஜ., இலக்கு
மதுரை : மதுரை பா.ஜ.,வில் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இப்பணியில் தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில பொதுச் செயலாளர் விஸ்வநாதன், மீனவர் பிரிவு நிர்வாகி சிவபிரபாகரன், மாவட்ட பொதுச்செயலாளர் கருடகிருஷ்ணன், பொருளாளர் நவீன அரசு உட்பட பலர் பங்கேற்றனர்.மதுரை நகரில் இம்மாதத்திற்குள் 2 லட்சம் புதிய உறுப்பினரை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் ஓட்டுச்சாவடி பகுதியில் குறைந்தபட்சம் 50 பேர் வீதம், ஒரு ஓட்டுச்சாவடி பகுதியில் 200 உறுப்பினரை சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.அடுத்த கட்டமாக கூட்டுக்குழு நியமிக்கப்பட உள்ளது. 5 ஓட்டுச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர், அவர்களுக்கு கீழ் ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஒரு குழு நியமிக்கப்படும். மாணவர்கள், இளைஞர்கள் சேர்க்கையிலும் கவனம் செலுத்த உள்ளனர். அவரவர் சார்ந்த சட்டசபை தொகுதிக்குள்தான் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதுதவிர மிஸ்டு கால் (88000 02024) மூலமும் சேரலாம் எனவும் தெரிவித்தனர்.