உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதுவிளாங்குடியில் 20 பேருக்கு நாய்க்கடி

புதுவிளாங்குடியில் 20 பேருக்கு நாய்க்கடி

மதுரை: மதுரை புது விளாங்குடி ராமமூர்த்தி நகரில் ஒரு வாரமாக நாய்களின் தொல்லை அதிகம் உள்ளது. ஒரு வாத்தில் அப்பகுதி மக்கள் 20 பேரை நாய்கள் கடித்துள்ளன.ராமமூர்த்தி நகர் பகுதியில் சமீப காலமாக வெறி நாய்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கும்பலாக சுற்றித் திரியும் வெறி நாய்கள் தங்களுக்குள் கடித்து சண்டையிட்டு மக்களை அச்சுறுத்துகின்றன. நேற்று 20 வயது பெண் ஒருவரை தெருநாய்கள் சூழ்ந்து கடித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தங்களுக்குள் கடித்து திரிந்த நாய்கள் இப்போது ரோட்டில் வருவோர், போவோரை கடிக்க பாய்கின்றன. இதனால் மக்கள் அதிகளவில் சிரமப்படுகின்றனர்.அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கூறுகையில், ''பத்து நாட்களாக வெறி நாய் தொல்லை அதிகளவில் உள்ளது. சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைவரையும் கடிக்கிறது. இரு நாட்கள் முன் ரோட்டில் விளையாடிய ஒரு குழந்தையை கடித்தது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாகனங்களையும் அவை துரத்தி வருவதால் விபத்து ஏற்படுகிறது. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ