உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாவட்டத்தில் 787 கண்மாய்களில் வண்டல் மண் அள்ள அனுமதி

மாவட்டத்தில் 787 கண்மாய்களில் வண்டல் மண் அள்ள அனுமதி

மதுரை: மதுரை மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 787 கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மதுரை கிழக்கு தாலுகாவில் 126, மேற்கு தாலுகாவில் 4, தெற்கில் 6, வடக்கில் 70, வாடிப்பட்டியில் 37, மேலுாரில் 270, திருப்பரங்குன்றத்தில் 9, உசிலம்பட்டியில் 83, பேரையூரில் 73, திருமங்கலத்தில் 62, கள்ளிக்குடியில் 47 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் விண்ணப்பம், ஆவணங்களை www.tnesevai.tn.gov.inஎன்ற இணைய முகவரி மூலம் சமர்ப்பிக்க வேண்டும். அதை வி.ஏ.ஓ.,க்கள் பரிசீலனை அளிக்க நிராகரிக்க தொடர்புள்ள தாசில்தாருக்கு பரிந்துரைக்க வேண்டும்.அவ்விண்ணப்பங்களை தாசில்தார்கள் புல எண், பரப்பளவு, நிலத்தின் வகைப்பாடு, மண்பாண்ட தொழிலாளர்களின் உண்மைத்தன்மை குறித்து பரிசீலித்து, விண்ணப்பம் பெற்றதில் இருந்து 10 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். அனுமதி நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 75 கனமீட்டர், எக்டேர் ஒன்றுக்கு 185 கனமீட்டர் அளவிலும், புன்செய் நிலங்களுக்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர், எக்டேருக்கு 222 கனமீட்டர் அளவுக்கு மிகாமலும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 60 கனமீட்டருக்கு மிகாமலும் அனுமதி வழங்கப்படும்.அனுமதிக்கப்பட்ட இடத்தில், அனுமதித்த அளவிற்கே, தினசரி காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே மண் எடுத்துச் செல்ல வேண்டும். இதனை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கலக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ