உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொடி கம்பம் அகற்றம் 94 வி.சி.க.,வினர் கைது

கொடி கம்பம் அகற்றம் 94 வி.சி.க.,வினர் கைது

வாடிப்பட்டி: அய்யங்கோட்டை ஆதிதிராவிடர் காலனி பொது மந்தையில் பல ஆண்டுகளாக வி.சி.க., கொடி கம்பம் இருந்தது. சில நாட்களுக்கு முன் அதன் அருகே புதிய தமிழகம் கட்சிக் கொடி கம்பம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு வி.சி.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொது இடங்களில் இருந்த கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற வருவாய்த்துறையினர் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வி.சி.க.,வினர், அப்பகுதி பொதுமக்கள் கொடிக் கம்பத்தை அகற்ற வந்த அதிகாரிகளை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் பதற்றம் நிலவியது. போலீசார், கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வி.சி.க.,வை சேர்ந்த 94 பேரை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை