உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ரோடு அமைக்கப்படுமாமதுரை 59வது வார்டு அவனியாபுரம் காவேரி தெருவில் மெயின் ரோட்டில் மட்டும் தார் ரோடு அமைத்துள்ளனர். கிளைத் தெருக்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. அனைத்து தெருக்களிலும் தரமான தார்ரோடு அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரேம், அவனியாபுரம்ஏ.டி.எம்., பழுதுமதுரை டி.வி.எஸ்., நகர் பழங்காநத்தம் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., இயந்திரம் ஆறு மாதங்களாக செயல்படாமல் உள்ளது. அப்பகுதி மக்கள் பணம் எடுக்க பல கி.மீ., செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் விரைந்து சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.- மோகன்சத்திய சாய் நகர்எரியாத விளக்குகள்மதுரை பொன்மேனி 2வது கிழக்குத் தெருவில்ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. திருட்டு பயம் உள்ளதால்இரவில் நடந்து செல்ல மக்கள் தயங்குகின்றனர். பலமுறை புகார் அளித்தும் சரி செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சந்தானம், பொன்மேனிநிரம்பியபாதாள சாக்கடைமதுரை 70வது வார்டு துரைசாமிநகர் விரிவாக்கம் நமச்சிவாய நகர் முதல் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி ரோட்டில் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், உடனே மீண்டும் அடைப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தரவேண்டும்.- பிரியா, துரைசாமி நகர்காற்று மாசுபடுகிறதுசிம்மக்கல் லட்சுமிநாராயணபுரம் அக்ரஹாரம் பகுதி பஜனை மடம் சந்து, கிழக்கு சந்துகளில் பழைய டயர்களை புதுப்பிக்க நிறுவனங்கள் டயர்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. அருகில்குடியிருப்போருக்கும்,பள்ளிக் குழந்தைகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜா, சிம்மக்கல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை