உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் அங்கன்வாடி பணியாளர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் அங்கன்வாடி பணியாளர் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., (அங்கன்வாடி) ஊழியர்கள், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ. 10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், பத்தாண்டு பணிமுடித்தவர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு அல்லது இணையான ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் நேற்று நடந்தது.மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மஞ்சுளா தலைமை வகித்தார். செயலாளர் மேனகா கோரிக்கையை விளக்கி பேசினார். முன்னாள் மாநில தலைவர்கள் நடராஜன், சாய்கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் நுார்ஜஹான், அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் மணிகண்டன், பொருளாளர் கல்யாணசுந்தரம், சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க தலைவர் மாரி, துணைத் தலைவர் ஜெயலட்சுமி, செயற்குழு உறுப்பினர்கள் ஷீலா, கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.* உசிலம்பட்டியில் அங்கன்வாடி அலுவலகம் முன் மாவட்ட பொருளாளர் ரமேஸ்வரி, ஒன்றிய நிர்வாகிகள் கவிதா, சுகுணா, சுமித்ரா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ